வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 26 மார்ச், 2011

எமது இனம் குறித்து உண்மையான அக்கறை கொண்ட ஒரே ஒரு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - கம்பவாரிதி இ.ஜெயராஜ்

மிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவராகவும் சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்பன் கழக கேட்போர் கூடத்தில் கழகத்தைச் சார்ந்தோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று கலந்துரையாடிய போதே ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே விளங்கி வருகின்றார் என்பதுடன் இனம் பற்றிய உண்மையான அக்கறை கொண்டவராகவும் அன்பு கொண்டவராகவும் இருந்துவருகின்றார் என்பதை நாங்கள் உணர்வுபூர்வமாக அறிவோம்.

தமிழர்களுக்கான சுயகௌரவம் பண்பாடு வாழ்வியல் உள்ளிட்ட சகல உரிமைகளையும் அரசுடன் பேசிப் பெற்றுக்கொடுக்கும் முக்கிய பொறுப்பும் தமிழ் மக்கள் சுயமிழந்து வாழாமல் இருப்பதற்கு மட்டுமல்லாமல் கௌரவமான வாழ்வை வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவும் அமைச்சர் அவர்களால் மட்டுமே முடியும்.

அத்துடன் 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஜனநாயக நீரோட்டத்திற்கு கொண்டு வந்தவர் அமைச்சர் என்றும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அங்கு உரையாற்றும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எந்தவொரு விடயத்தையும் தனித்துவமாகவும் தனித்தன்மையுடனும் ஆராய்ந்து தீர்க்கமாகவும் முடிவெடுக்கக் கூடியவர் என்பதுடன் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராக இருந்த போது இந்து சமயத்திற்கு அளப்பரிய பணிகளையும் ஆற்றியுள்ளார்.

உள்ளத்தின் கிடக்கையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்யக் கூடிய பண்புகள் நிறைந்த அரசியல் தலைமை இவரிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி ஜெயராஜ் அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

நிறைவில் கொழும்பில் அமையப்பெறவுள்ள ஐஸ்வர்யலக்ஸ்சுமி கோயில் புதிய கட்டடத் திருப்பணிக்காக ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களிடம் அமைச்சர் அவர்கள் கையளித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ ஜெயவாத்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் பிரசாந்தன் உள்ளிட்ட கம்பன் கழகத்தை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’