வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 மார்ச், 2011

வான் புலிகளின் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியது :விக்கி லீக்ஸ்

மிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது வான் பாதுகாப்பு முறைமையை பலப்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை புலிகளின் விமானங்கள் தாக்கியதை இந்தியா வழங்கிய ராடர்கள் மூலம் தடுக்கமுடியாமல் போனதையடுத்து அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007 மார்ச் 30 ஆம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கை அழைத்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்காலத்தில் எல்.ரி.ரி.ஈ.யின் வான் தாக்குதல்களுக்கு எதிராக எவ்வாறு வான் பாதுகாப்பை பலப்படுத்தலாம் என ஆராய்வதற்காக அமெரிக்க இராணுவ குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தாராம்.
கட்டுநாயக்கவிமானப்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்திய சிலநாட்களில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இத்தாக்குதலால் , இந்தியாவினால் கடனாக வழங்கப்பட்ட இரு எம்.ஐ. 17 ஹெலிகள் உட்பட பல ஹெலிகள் சேதமடைந்திருந்தன.
அவ்வேளையில் புலிகளின் விமானங்களை இந்திய ராடர்கள் கண்டறிய தவறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இலங்கை அரசாங்க அதிகாரிகள் அதை மறுத்திருந்தனர்.
இந்நிலையில், இலங்கையின் ராடர்கள் புலிகளின் வான் அச்சுறுத்தலை தடுக்க போதுமானவை அல்ல என அமெரிக்கத் தூதுரிடம் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தாக 2007 ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அனுப்பப்பட்ட இரகசிய கேபிள் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’