இந்தியாவில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன
.அல்குவைதா மற்றும் லஷ்கர் ஈ தொய்பா போன்ற அமைப்புகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என இந்தியாவின் அனைத்து கரையோர மாவட்டங்களின் சகல தலைமைச் செயலர்கள் மற்றும் பொலிஸ் ஆணையாளர்களுக்கு இந்திய புலனாயவு பணிப்பாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக 'டைம்ஸ் ஒவ் இந்தியா' பத்திரிகை தெரிவித்துள்ளது.
மும்பையில் இடம்பெற்ற 26/11 தாக்குதல் பாணியில் உலகக் கிண்ணப் போட்டிகளின்போதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மார்ச் 2 ஆம் திகதியிடப்பட்ட மேற்படி கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் ஊடகப் பிரிவுத் தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவிக்கையில், "நாம் உள்துறை அமைச்சுடன் தொடர்பில் இருக்கிறோம். சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனக் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’