மூன்றாவது அணி அமைப்பது குறித்து அனைத்துத் தலைவர்களுடனும் பேசிய பிறகு நாளை முடிவை அறிவிக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
கூட்டணிக் கட்சிகளைப் பற்றி எந்த கவலையும் படாமல் அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதில் கூட்டணிக் கட்சிகள் கேட்டிருந்த ஏராளமான தொகுதிகளும் அடக்கம், தேமுதிக கோரிய 21 தொகுதிகளும் அடக்கம்.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியவை போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
அதே போல அதிமுகவால் கேவலமாக நடத்தப்பட்ட மதிமுகவும் கூட்டணியை விட்டு வெளியேறவுள்ளது.
இந் நிலையில் தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன், பார்வர்ட் பிளாக் தலைவர் கதிரவன் ஆகியோர் வந்தனர்.
அவர்களுடன் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்திய விஜய்காந்த் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளைக்குத்தான் எதையும் கூற முடியும். அனைத்துத் தலைவர்களுடனும் பேசிய பிறகுதான் முடிவெடுக்க முடியும். நாளை வரை பொறுத்திருங்கள், நானே கூப்பிட்டுச் சொல்கிறேன். அவசரப்பட்டு எதையும் சொல்ல முடியாது என்றார்.
முதல் கூட்டணியே பெரும் கோணலாக மாறியுள்ளதால் விஜயகாந்த் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேமுதிகவினரும் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.
அதிமுகவிடம் 41 சீட்களை கேட்டுப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் அவர் கேட்ட தொகுதிகளில் பலவற்றை அதிமுக தரவில்லை. குறிப்பாக 21 தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதாம். இதனால் விஜய்காந்த் கடும் அப்செட்டாகியுள்ளார்.
இத்தனைக்கும் நேற்று மாலையில்தான் அதிமுக குழுவுடன், விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் தீவிர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் வெளியே வந்த அவர், தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி விட்டதாகவும், ஓரிரு நாளில் விஜயகாந்த் அதை அறிவிப்பார் என்றும் கூறி விட்டுச் சென்றார்.
ஆனால் முன்னால் நடக்க விட்டு விட்டு பின்னால் கதவை மூடுவது போல வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேமுதிகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டார் ஜெயலலிதா.
இதனால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து இன்று காலை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் இடதுசாரிகள் உள்ளிட்ட பிற கட்சியினருடனும் ஆலோசனை நடத்தினார்.
அதில், அதிமுகவுடன் இன்னொரு முறை பேசிப் பார்ப்பது. நமது தொகுதிகளை விட்டுத் தராவிட்டால் தனி அணி காண்பது குறித்து யோசிப்பது. அப்படி தனி அணி அமைத்தால், அதில் மதிமுகவையும் சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தேமுதிக அலுவலகத்தில் ஜெ. கொடும்பாவி எரிப்பு:
இதற்கிடையே, இன்று காலை முதல் தேமுதிக அலுவலகத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து கோஷமிட்டனர்.
நம்மை அவமதித்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். உடனடியாக கூட்டணியிலிருந்து விலக வேண்டும். தனித்துப் போட்டியிடுவோம் என்று அவர்கள் ஆவேசமாக கூறினர்.
மேலும் அலுவலகத்திற்கு வெளியேயும், உள்ளேயுயம் வைத்து ஜெயலலிதாவின் கொடும்பாவியையும் தேமுதிக தொண்டர்கள் எரித்ததால் பரபரப்பும் ஏற்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’