வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 மார்ச், 2011

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 30 சதவீதத்தால் குறைவடையும் : வர்த்தக அமைச்சு

மிழ் -சிங்கள புது வருடத்தை முன்னிட்டு 10வகை அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 30 சதவீதத்தால் குறைவடையும் என்று வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிவர்தன தெரிவித்துள்ளார்
.சதொச மற்றும் கூட்டுறவுச் சங்க களஞ்சியசாலைகளில் சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, கோதுமை மா, கடலை, பயறு, நெத்தலி கறுவாடு, டின் மீன், அரிசி ஆகிய உணவு வகைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும் வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஊவா பரணகம, வெலிமடை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் இருந்து 35ஆயிரம் மெட்ரிக் தொன் உள்@ர் கிழங்கு சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கும் தற்போது வைப்பில் உள்ளதோடு 5ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
டின் மீன் 174 ரூபாவுக்கும், ஒரு கிலோ சீனி 90 ரூபாவுக்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 70 ரூபாவுக்கும், ஒரு கிலோ பயறு 216 ரூபாவிற்கும், முட்டை ஒன்று 12 ரூபாவுக்கும் விற்கப்படுவதாக செயலாளர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’