அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து 25 தொகுதிகளில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்
.அதிமுக அணியில் இடம்பெற்று பின்னர் ஒரு சீட் கூட கிடைக்காமல் அவமானத்துடன் வெளியேறி. நடிகர் கார்த்திக், வெளியே வாருங்கள் தனிக் கூட்டணி அமைக்கலாம் என வைகோவுக்கு அழைப்பு விடுத்தார்.
அவர் போன நேரமோ என்னவோ, பின்னாலேயே சிபிஐ, சிபிஎம், தேமுதிக என அத்தனை கூட்டணிக் கட்சிகளும் நிராதரவாக விடப்பட்டன. இதனால் பெரிதும் மகிழ்ந்தவர் கார்த்திக்காக மட்டுமே இருக்க முடியும். எப்படியோ ஒரு கூட்டணி கன்பர்ம்ட் என்று நினைத்த அவர் மீண்டும் வைகோவை குறி வைத்து வெளியே வருமாறு அழைத்தார். ஆனால் வைகோ பதிலே அளிக்கவில்லை.
3வது அணி அமையும், அதில் இணையலாம் என்று காத்திருந்த கார்த்திக்கின் ஆசை, நப்பாசையாக போய் விட்டது. 3வது அணிக்கான வாய்ப்பு இல்லாமலேயே போய் விட்டது.
இதையடுத்து அதிமுகவை எதிர்த்து தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் கார்த்திக்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 3வது அணி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.
அதிமுகவை எதிர்த்து போட்டியிட தற்போது முடிவு செய்துள்ளோம். 26 தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம். அத்தனையும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளாகவே இருக்கும் என்றார் கார்த்திக்.
நேற்று பேட்டிஅளித்த கார்த்திக், தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்ட தொகுதிகளையும் அறிவித்து அங்கு தனது கட்சி போட்டியிடப் போவதாக கூறியிருந்தார். இந்த 25 தொகுதிகளையாவது, நடைமுறையில் இருக்கிற தொகுதிகளாக அவர் செலக்ட் செய்தால் நலமாக இருக்கும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’