வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 பிப்ரவரி, 2011

கைது அச்சத்தினால் சுவிஸ் விஜயத்தை ரத்துச் செய்த ஜோர்ஜ் புஷ்

மெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக சுவிட்ஸர்லாந்துக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை ரத்துச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நலநிதியமொன்றுக்கு நிதி சேகரிப்பதற்காக சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ள இரவு விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டு ஜோர்ஜ் புஷ் உரையாற்றவிருந்தார்.
குவாண்டனாமோ குடா தடுப்பு முகாமில் கைதிகள் மீது அமெரிக்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் காரணமாக ஜோர்ஜ் புஷ் மீது சுவிட்ஸர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுவிட்ஸர்லாந்துக்கு ஜோர்ஜ் புஷ் வந்ததால் அவரை கைது செய்ய வேண்டுமென மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புகள் சுவிஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தன.
இப்பின்னணியில் ஜோர்ஜ் புஷ் தமது விஜயத்தை ரத்துச் செய்துள்ளார். இடையூறு அச்சத்தின் காரணமாக புஷ்ஷின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டதாக மேற்படி விருந்துபசார நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜோர்ஜ் புஷ் எங்கு சென்றாலும் அவருக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டம் தொடரும் என பாரிஸை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’