கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தங்கியிருந்தோர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் பற்கள் அடித்து வீழ்த்தப்பட்ட ஒரு இலங்கை தமிழ் அகதியொருவர் சிகிச்சைக்காக பேத் நகரத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த மோதலில் இலங்கையர், ஈராக்கியர், குவைத்தியர்களென 8 பேர் அடங்கியிருந்தனர்.
எவரும் காயப்பட முன்னரே, முகாமின் பணியாளரான செர்கோ இவர்களை விலக்கிவிட்டார்.
ஆனால், பின்னர் பிற்பகல் ஒரு மணியளவில் மீண்டும் சண்டை மூண்டு ஒருவர் படுகாயமடைந்தார்.
முகாமிலிருந்த வைத்திய மையத்தில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டாலும், மேலதிக சிகிச்சைக்காக இவர் பேத் நகர வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளார். இவர் இலங்கைத் தமிழர் ஆவாரென அகதி முகாம் அதிகாரிகளில் ஒருவரான அயன் றின்ரெனல் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’