இலங்கையில் மும்மொழிகளையும் பயன்படுத்துவதில் கனடாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நானயக்கார இன்று தெரிவித்தார்
.தேசிய மொழி கொள்கையை சிறந்த முறையில் அமுல்படுத்துவதன் ஊடாக நாட்டில் வளமான எதிர்காலமொன்றை ஏற்படுத்தலாம் என அவர் கூறினார்.
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்காக கனேடிய அரசின் நிதியுதவியுடாக தயாரிக்கப்பட்ட பொலிஸாருக்கான உரையாடல் எனும் நூல் கையளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வாசுதேவ நானயக்கார,
"மொழிக்கொள்கையை அறிமுகப்படுத்துவதற்காக எமது அமைச்சு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து செயற்பட தயார்.
பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் மொழி பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்று ஏனைய திணைக்களங்களையும் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு ஊக்கப்படுதத்வுள்ளோம்.
இது போன்ற பல வெளியீடுகளை எனது அமைச்சு வெளியிடவுள்ளது" என்றார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் பங்களிப்புடன் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் கனேடிய நாட்டு அரசின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்ட பொலிஸாருக்கான உரையாடல் எனும் நூலை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கையளிப்பதற்காக 65,000 பிரதிகள் பொலிஸ் திணைக்களத்திடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டன

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’