நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் அதிமுக தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
மாசி மகம் மற்றும் பெளர்ணமி தினம் ஆகியவை தனக்கு மிக உகந்த எண்ணான 9 கூட்டுத் தொகை வரும் வகையில் வரும் 18ம் தேதி வருவதால் அன்றைய தினம் இந்த தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடலாம் என்று தெரிகிறது.
நாள், நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து எதையும் செய்பவர் ஜெயலலிதா. கட்சியினருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தாலும் அதில் கூட்டுத் தொகை 9 இருப்பது போல பார்த்துக் கொள்வார். கடந்த சில ஆண்டுகளாக கூட்டுத் தொகை 6 வந்தால் நல்லது என்று கூறப்பட்டதால் அதையொட்டியே எந்தச் செயலையும் செய்து வந்தார். இப்போது மீண்டும் 9 தான் உகந்த நம்பர் என்று சொல்லப்பட்டுவிட்டதால் அந்த எண்ணைச் சுற்றியே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி தேதியாகவும் பிப்ரவரி 18 தான் கடைசி தேதியாகும்.
தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் கூட அதிமுகவுக்கு இத்தனை இடங்கள் நிச்சயம் வேண்டும் என்று 9 கூட்டுத் தொகை வருமாறு தான் பேசப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை போக மீதி இடங்களைத் தான் உங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் பிரித்துத் தர முடியும் என்று தேமுதிகவிடம் அதிமுக பேசி வருகிறது.
தேமுதிகவுடன் பாமகவுக்கும் வலை விரித்துக் காத்துள்ளார் ஜெயலலிதா. ஆனால், தேமுதிக தனது டிமாண்டில் திட்டவட்டமாக உள்ளதால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
வழக்கமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என செயல்படும் ஜெயலலிதா, விஜய்காந்த் விஷயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பொறுமை காட்டி வருகிறார். அவருடன் கூட்டணி் அமைந்தால் மட்டுமே அதிமுகாவுக்கு வெற்றி வாய்ப்பு என்று தனியார் அமைப்பு நடத்திய சர்வே கூறிவிட்டதால் விஜய்காந்த் என்ன இழுபறி செய்தாலும் பொறுமை காக்க வேண்டிய நிலையி்ல் ஜெயலலிதா உள்ளார்.
அதே போல அதிமுகவுடன் கூட்டணிக்கு பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி தயாராக இல்லை. இதனால் அதிலும் இழுத்தடிப்பு தொடர்கிறது.
அதிமுக கூட்டணியில் இப்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசு கட்சி, பார்வார்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இணையலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் கார்த்திக்கின் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியையும், மனித நேய மக்கள் கட்சிக்கும், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கும் தலா 2 தொகுதிகளையும் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கும் தலா 1 சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுக தரப்பு காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டதோடு, அடுத்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க திருச்சியில் மாநில மாநாட்டுக்கும் ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டதால் விஜய்காந்த் விஷயத்தில் அதிமுக தரப்பில் பொறுமை கரைய ஆரம்பித்துள்ளது.
விஜய்காந்த் இன்னும் வராததால் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை செய்ய முடியாத நிலையில் அதிமுக உள்ளது.
காலம் கடந்து கொண்டே உள்ளதால் கூட்டணி விவகாரத்தில் ஏதாவது முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் தனக்கு உகந்த நாளான 18ம் தேதியன்று, கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஜெயலலிதா அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
கார்த்திக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடான தொகுதி உடன்பாட்டை அன்றைய தினம் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூறப்படுகிறது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’