வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 பிப்ரவரி, 2011

தயா மாஸ்டர் மீதான வழக்கில் சட்டமா அதிபரின் அபிப்பிராயம் கோரியுள்ள சிஐடீ

யா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மீதான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் அபிப்பிராயத்தைக் கோரவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கூறினர்.

இதுவரை காலமும் இந்த இருவர் மீதும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 'குற்றத்தாக்கல்' செய்யாத நிலையில் செய்யாத நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு இவர்களின் வழக்குறைஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
தயா மாஸ்டரின் வாக்குமூலத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பி அவர் பதில் கிடைத்ததும் மேற்கொண்டு செய்வது பற்றி நீதிமன்றுக்குத் தெரிவிப்பதாக குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கூறினர்.
தயா மாஸ்டரும் ஜோர்ஜ் மாஸ்டரும் புலிகள் இயக்கத்தில் மொழிபெயர்ப்பாளர்களாக செயலாற்றியவர்கள். இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள். மேற்படி வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’