சுதந்திரத்தை வெற்றி கொள்வது என்பது ஒவ்வொரு நாடும் எதிர்கொண்ட சவாலாகும். அந்த சுதந்திரத்தை பாதுகாப்பது அதை விட பெரிய சவாலாகும். என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
கதிர்காமத்தில் நடைபெறும் தேசிய சுதந்திரத்தின விழாவில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்...
"சுதந்திரத்தை வெற்றி கொள்வது என்பது ஒவ்வொரு நாடும் எதிர்கொண்ட சவாலாகும். அந்த சுதந்திரத்தை பாதுகாப்பது அதை விட பெரிய சவாலாகும்.
ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கான பேராட்டம் ஒரு காலப்பகுதியில் முடிவடைந்து விடலாம். ஆனால் சுதந்திரத்தை பாதுகாத்து கொள்வதற்கான சவால் எப்போதும் தொடர்ந்திருக்கும். எனவே, ஆர்வத்துடனும் விழிப்புணர்வுடனும் நாட்டின் மீதான பற்றுடனும் பெரும்போராட்டமொன்று தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
30 வருடகால பயங்கரவாத காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தவிர நாடு இழந்த ஏனைய எல்லாவற்றையும் பெற்றுக் கொடுப்பதற்கான சவாலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இத்தகைய அழிவுகளை எதிர்நோக்கிய ஒரு நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அதிக காலம் தேவைப்படும் என்பதை உலக வரலாறு வெளிப்படுத்துகிறது.
இயற்கையை வெல்ல முடியாது
தற்போது மோசமான காலநிலை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல நாடுகள் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றன. எமது நாட்டிலும் சில பகுதிகளில் எமது சொந்த பிரஜைகளும் இத்தகைய நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர். மோசமான காலநிலையின் தாக்கத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாத போதிலும் அதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ நாம் உறுதிபூண்டுள்ளோம்.
எந்தத் தடை வந்தாலும் நாம் இழந்த பொருளாதார அபிவிருத்தி வாய்ப்புகளை மீளப்பெற்றுக் கொள்வதற்கு நாம் தாமதிக்க முடியாது. கண்ணிவெடிகள் நிறைந்திருந்த பகுதிகளை இரு வருடங்களுக்குள் நாம் விவசாயம் செய்யக்கூடியதும் அழகியதுமான நிலங்களாக மாற்றியுள்ளோம்.
கல்வி, சுகாதார சேவைகள் முன்னேற்றமடைந்துள்ளன. அரச சேவை பலப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் துறை வளர்ச்சியடைவதற்குத் தேவையான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பின்மை எப்போதையும்விட மிகக் குறைந்த வீதத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து பிரதேசங்களிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி தொடரும்
அதேபோல் சங்குப்பிட்டி, கிண்ணியா, மன்னம்பிட்டி, மன்னார், கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் பெரும் பாலங்களையும் கொழும்பின் சுற்றுப்புறங்களில் மேம்பாலங்களையும் நாம் நிர்மாணித்துள்ளோம்.
நாடு முழுவதும் பாரிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து பிரதேசங்களுக்கும் மின்சார வசதி விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மொரகாகந்த, உமா ஓயா, தெதுறு ஓயா, வேரகாஹெல, ரம்புக்கன் ஓயா போன்ற நீர்ப்பாசனத்திட்டங்கள் மூலம் உலர்வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 5 வருடகாலம் அர்த்தபுஷ்டியானது
வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்று பல்கலைக்கழகங்களும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. கதிர்காம கந்தனின் ஆசியுடன் கதிர்காமம் கிரிவிஹாரையில் முதலாவது நெனசெல – அறிவகம் ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது அது நாடு முழுவதும் பரவியுள்ளது. 5 வருடங்களில் கணினி அறிவு உயர் மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா எனும் புதிய விமான நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. விற்பனை செய்யப்பட்டிருந்த தேசிய விமான நிறுவனம் மீண்டும் மக்களுக்கு சொந்தமாக்கப்பட்டது. காஸ் கம்பனியும் மக்களுக்கு சொந்தமாக்கப்பட்டது. எனவே சுதந்திரத்தின் பின் கடந்த 5 வருடகாலம் மிக அர்த்தபுஷ்டியான காலம் என நாம் பெருமைப்பட முடியும்.
அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள மக்கள் அடைந்துள்ள வெற்றிகளை எமது மக்களுக்கும் கிடைக்க வேண்டும். எமது இலக்கு வறுமையை ஒழிப்பதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் வேலை வாய்ப்புகளை விஸ்தரிக்க வேண்டும்.
மின்சாரம், வீதிகள், தொலைதொடர்பு, கல்வி, சுகாதார சேவைகள் போன்ற அபிவிருத்திகள் மூலம் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி நீக்கப்பட்டால்தான் எமது சுதந்திரம் நீடிக்கும்.
பொதுவாக கொழும்பில் நடைபெற்ற சுதந்திரத் தின விழாவை நாம் கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளோம். பலமான தன்னிறைவான பொருளாதாரத்திற்கு மஹிந்த சிந்தனை வழிகாட்டுகிறது. வெற்றிரகரமான வர்த்தக சமூகத்தை மாத்திரமல்லாமல் நல்ல வருமானம் ஈட்டும் விவசாயிளை உருவாக்கவும் நாம் எதிர்பார்க்கிறோம். மரக்கறிகள், பழங்கள், தேயிலை, இறப்பர், தேங்காய் என்பனவற்றை உலக சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு தமது பொருட்களுக்கு சிறந்த விலை கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். எமது சொந்த மண்ணுக்கு பெறுமதி சேர்க்கும் பொருளாதாரத்தை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.
மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்
பயங்கரவாதத்தை எமது படையினர் வெற்றி கொள்வது குறித்து மக்கள் புதிதாக சிந்திக்க ஆரம்பித்தது போலவே நாட்டின் எதிர்கால முன்னேற்றம் குறித்த மக்களின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம். ஒழுக்கத்திற்கு மதிப்பளிப்பது அபிவிருத்திக்கு அவசியமாகும்.
மக்களிடம் பிரபல்யமாகும் தீர்மானங்கள் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அசௌகரியமான, கடினமான தீர்மானங்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம்.
துட்டகைமுனு மன்னன் தாய்நாட்டை ஒன்றிணைக்கும் தனது பயணத்தை இந்த கதிர்காமக் கடவுளின் ஆசியுடன்தான் ஆரம்பித்தான். எமது வரலாற்றில் பல வெற்றிரகரமான சுதந்திரப் போராட்டங்கள் இந்த கதிர்காம கடவுளின் ஆசியுடன்தான் ஆரம்பமாகின. அதேபோன்ற ஆசியுடன், முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடொன்றின் தலைவர் என்ற வகையில், ஆசியாவின் உயர்ந்த நாடாகும் யுகத்திற்கு உங்களை கொண்டு செல்லும் பொறுப்புடைமையையும் கடமையையும் ஏற்றுக்கொள்கிறேன்'' என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’