எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறிய பின்னரும் அங்கு போராட்டங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தானோ அல்லது தனது மகனோ அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு அரசு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் முபாரக் தெரிவித்துள்ளார்
. இதனிடையே அதிபருக்கு ஆதரவான போராட்டங்கள் அங்கு தொடங்கியுள்ளன. இருதரப்பு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இராணுவம் போராட்டக்காரர்களை கலைந்து போகும்படியும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்படியும் கோரியுள்ளது.மக்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து வெளியாகியுள்ளது என்றும், கோரிக்கைகள் தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ள இராணுவப் பேச்சாளர், வீரம், நேர்மை, கடமை உணர்ச்சி, தியாகம் போன்ற விடயங்கள் மூலம் இராணுவமும் மக்களும் சேர்ந்து நாட்டில் தற்போதுள்ள நிலையை மாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, எகிப்தில் மாறுதல் என்பது இப்போது ஆரம்பிக்க வேண்டும் எனவும் அது ஒழுங்காகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆனாலும் அதிபர் முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோருவது போல, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அமெரிக்க அதிபர் கோரவில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’