உங்களது கரங்கள் கறைபடியாதவைகள் என்றால் அவைகளை உயர்த்துங்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நோக்கி இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற அவசரகால சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த போது தெரிவித்திருந்தார்
தொடர்ந்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு உரையாற்றுகையில்
எம் மீதான அவதூறுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பரப்புவதற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்சிதான்.
மக்கள் மத்தியில் எமக்கிருக்கும் ஆதரவை கண்டு இவர்கள் பயப்படுகின்றார்கள். அந்த அரசியல் பயத்தின் காரணமாகவே இவர்கள் இவ்வாறு உண்மைகளை திரித்து கூறி வருகின்றனர்.
அதுவும் தேர்தல் காலம் என்பதால் இவர்கள் மக்கள் மத்தியில் செல்வதற்கு பயப்படுகின்றார்கள். மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக எதை இவர்களால் கூற முடியும்?..
உரிமை உரிமை என்று வெறும் ஊடகங்களுக்காக மட்டும் கூச்சலிடும் இவர்கள் உரிமையை பெற்றுக்கொடுக்கவும் இல்லை. அதற்காக நடைமுறைச்சாத்தியமாக முயலவும் இல்லை. அவ்வாறு நடந்திருந்தால் அதை பற்றி மக்களிடம் இவர்களால் கூற முடியும்.
மக்களுக்கு சேவை செய்திருந்தால் அதை கூறியிருக்க முடியும். அல்லது மக்களின் துயரங்களை துடைத்திருந்தால் அதையாவது கூறியிருக்க முடியம்.
நாடாளுமன்றம் சென்று என்ன செய்தீர்கள் என்று கேட்டால் பாம்பு குட்டிக்கு பல்லு விளக்கினேன் சும்மாவா இருந்தேன் என்பார்கள்..
கோழி முட்டையில் மயிர் பிடுங்கினேன் சும்மாவா இருந்தேன் என்று கேட்பார்கள்.
மயிரால் கட்டி மலையை இழுத்தோம் என்பார்கள்
ஆகவே இவர்கள் தங்களை பற்றி மக்களிடம் கூறுவதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை.
ஆகவேதான் அடுத்தவர்கள் மீது வசை பாடுவதை மட்டும் தமது தொழிலாக இவர்கள் கொண்டுள்ளனர்.
மக்களின் ஆதரவை பெறுவதற்காக பொய்களை சொல்லி மக்களை கடந்த காலங்களை போல் ஏமாற்ற நினைக்கின்றார்கள்.
சிலரை பல காலம் ஏமாற்ற முடியும். பலரை சில காலம் ஏமாற்ற முடியும். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்றிவிட முடியாது. எமது மக்களையும் தொடர்ந்தும் யாரும் ஏமாற்றி விட முடியாது.
இவ்வாறு உரையாற்றியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காசாப்புக்கடைகாரன் ஜீவகாருண்யம் குறித்து பேசுவது போல் கொள்ளைக்காரர்களே கொள்ளைகளை பற்றி பேசுகிறார்கள். ஊடகதர்மத்தை கொன்றொழித்தவர்களே ஊடக தர்மம் குறித்தும் உபதேசம் செய்கிறார்கள்
என்று தொடர்ந்து பேசியிருந்ததோடு உங்களது கரங்கள் கறைபடிந்தவைகள் இல்லை என்றால் அவைகளை உயர்த்துங்கள் பார்க்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து கேட்டபோது அனைவரும் சங்கடத்தில் ஆழ்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரையின் முழு வடிவம் நாளை வெளிவரும்.
.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’