வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 பிப்ரவரி, 2011

மனைவியின் துணிச்சலால் மயிரிழையில் உயிர்பிழைத்த கணவர்

லேசியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் மரத்தினால் ஆன கரண்டி ஒன்றின் மூலம் புலியொன்றினைத் தாக்கி தனது கணவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

வட மலேசியாவின் காடு சார்ந்த பகுதியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹான் பிசாயு (55) என்ற அப்பெண்மணி தனது கணவரான டம்புன் கிடியு (60) என்பவரை இரையாக்க முயற்சித்த புலியின் தலையில் கடும் தாக்குதலை நடத்தி அதனை விரட்டியுள்ளார்.
விரட்டப்பட்ட அப்புலி டம்புனை மோசமாக தாக்கியுள்ளதுடன் அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டம்புன், தான் புலியுடன் கடுமையாக மோதியதாகவும், மரத்தில் ஏறி தப்பிக்க முற்பட்டபோது புலி தன்னை கீழே இழுத்ததாகவும் தனது சத்தம் கேட்டு மனைவி அவ்விடத்திற்கு வராமல் போயிருந்தால் தனது நிலமை மோசமாகியிருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’