யாழ். கே.கே.எஸ். வீதியில் கட்டிட நிர்மாணப் பணியில் பயன்படுத்தப்பட்ட சீமெந்துக் கலவை இயந்திரத்தின் குழாயில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக பணியாளர்கள் ஆறு பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 15 வயதுச் சிறுவனொருவனும் அடங்குவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீமெந்துக் கலவை இயந்திரத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது இயந்திரத்தின் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே ஆறு பேர் காயமடைந்தாத யாழ் .பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’