போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ரூ.40 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி இருப்பதாக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கூறப் பட்டு இருப்பதாவது:
தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவதற்கு இந்த அரசால் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ. 30 கோடிக்கான பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இரண்டாம் கட்டத்திற் கான பணிகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களும், இந்த முகாம் களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன.
இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ரூ.40 கோடிக்கான நிவாரணப் பொருட்களை இந்த அரசு வழங்கியது. மத்திய அரசும் இலங்கை தமிழர் நிவாரணப் பணிகளுக்காக, ரூ.500 கோடியை வழங்கியுள்ளது.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண் டும் என்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் தொடர்ந்து வேட்டையாடும் நிலையினைக்கண்டு, தமிழக அரசின் சார்பாக பல முறை மத்திய அரசுக்கு கோரிக்கைகளை வைத்து, மத்திய அரசும் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறிய போதிலும், கடற்படையினர், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொட ர் ந்து மனிதாபிமானமற்ற செயலிலே ஈடுபட்டு, நமது மீனவர்களை கொன்று வருவதை நிறுத்தியபாடில்லை.
இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்படாமல், தமிழக மீனவர்கள் இனியும் கொல்லப்படும் நிலை வராமல் இருக்க இறுதி முடிவினை மத் திய அரசு எடுத்தே தீர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’