கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா வடக்கு பிரதேசங்களுக்கு உட்பட்ட வலயங்களின் தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (11) பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தங்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பாக சந்திரகுமார் அவர்களுடன் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் செயற்படவேண்டியது எமது கடமையும் பொறுப்பும் ஆகும். அந்த வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் நானும் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்வி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம். விரைவில் சாதகமான பதிலை பெற்றுத்தருவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்த அவர் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் என்பது ஒரு கடினமான விடயம் எனினும் அது தொடர்பில் கடுமையாக உழைத்து நிரந்தர நியமனங்களை பெற்றுத்தருவோம் என உறுதியளித்ததோடு நம்பிக்கை தளராது இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பில் முல்லை கிளிநொச்சி வவுனியா வடக்கு துணுக்காய் வலயங்களின் தொண்டர் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’