வைத்தியசாலை பணியாளர்கள் நோயாளர்களுடன் சேவை மனப்பான்மையுடனும் கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்றி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சமயா சமய சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு தற்காலிக நியமனம் வழங்கும் நிகழ்விங்களை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இங்கு கடமைபுரியும் ஒவ்வொரு பணியாளர்களும் சேவைமனப்பான்மையுடனும் கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். இதனை தொழில் வாய்ப்பாக மட்டும் எண்ணாது மக்களுக்கான சேவையாகவும் செய்ய வேண்டும் என்பதே முக்கியமானது. ஒவ்வொருவரும் நிர்வாகத்துக்கு கீழ்ப் படிந்து நடக்கும் அதேவேளை மன உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக வைத்தியசாலை நோயாளர்களுடனும் பார்வையாளர்களுடனும் அன்பாகவும் பண்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டுமெனவும் அவ்வாறு அவர்களால் அசௌகரியங்கள் நேரும் பட்சத்தில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டுமெனவும் அவ்வாறு நிர்வாகம் கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அமைச்சர் இதன்போது கேட்டுக் கொண்டார்.
முக்கியமாக வைத்தியசாலையின், சுத்தம், சுகாதாரம் தொடர்பில் அதிக அக்கறை கொண்டு எல்லாத் தரப்பினரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் இன்று 75 பேருக்கு கையளிக்கப்படுகின்ற அதேவேளை ஏனையோருக்கு இவ் வருட நடுப்பகுதியில் நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இவ்வைபவம் தாதியர் பயிற்சிக் கல்லூர்p மண்டபத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் பவானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கிளின்வெல்ட், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் ஆகியவற்றிலிருந்து கடந்த காலங்களில் தொண்டர்களாக பணியாற்றிய 75 பேர் சமயா சமய சுத்திகரிப்புத் தொழிலாளர்களாக தற்காலிக நியமனங்களைப் பெற்றுக் கொண்டனர்.
நியமனக் கடிதங்கள் சிலவற்றை சம்பிரதாயபூர்வமாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் சத்திரசிகிச்சை நிபுணர் ரவிராஜ் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் ஈ.பி.டி.பி யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) வைத்pயசாலை பிரதம கணக்காளர் விஜயரகுநாதன் செயலாளர் பிரசாத், நிர்வாக உத்தியோகத்தர் மோகனதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’