விக்கிலீக்ஸ் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு சமூக வலைத்தளமான டுவிட்டருக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் மற்றும் விக்கிலீக்ஸுக்கு இரகசிய ஆவணங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ உத்தியோகஸ்தர் பிராட்லி மன்னிங் உட்பட பலரின் விபரங்களை அமெரிக்க நீதித்துறை திணைக்களத்துக்கு டுவிட்டர் இணையத்தளம் ஒப்படைக்க வேண்டும்.
சந்தாதாரர் பெயர்கள், பாவனையாளர் பெயர்கள், தபால் முகவரிகள், வதிவிட முகவரிகள் என்பனவும் ஒப்படைக்கப்பட வேண்டிய விபரங்களில் அடங்கும் என நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’