பிரித்தானிய ஊடக நிறுவனமான பி.பி.சி செலவீனத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக தனது உலக சேவைப் பிரிவில் உள்ள 32 மொழிகளில் 5 மொழிகளுக்கான சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மெசிடோனிய, அல்பேனிய, சேர்பிய மொழிச்சேவைகளும் கரீபிய பகுதிகளுக்கான ஆங்கிலப் பிரிவு மற்றும் ஆபிரிக்காவுக்கான போர்த்துக்கேய மொழிச்சேவைகளுமே நிறுத்தப்படவுள்ளன.
இதன் மூலம் சுமார் 650 பணியாளர்கள் தங்களது தொழிலை இழக்கவுள்ளனர். மேலும் அந்நிறுவனத்தின் மொத்தசெலவீனத்தில் ஆண்டிற்கு 46 மில்லியன்கள் குறையும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானம் காரணமாக தொழிற்சங்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பி.பி.சி இன் உலகச் சேவை பிரிவானது சுமார் 32 மொழிகளில் ஒளிரப்பினை மேற்கொண்டு வருவதுடன் சுமார் 2,400 பணியாளர்களையும் கொண்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’