வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 22 ஜனவரி, 2011

ஐ.நா. நிபுணர் குழுவுடனான நேரடி பேச்சுகளை இலங்கை துண்டிப்பு


ஐ.
.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுடனான நேரடி பேச்சுக்களை இலங்கை துண்டித்துள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு தலைமை தாங்கியவரான தற்போதைய ஐ.நாவுக்கான பிரதி இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு எழுதிய கடிதமொன்றில், இலங்கை அரசாங்கம் பான் கீ மூனின் ஆலோசகர்களுடன் பேசும் எனவும் போர்க்குற்றங்களுக்கான விசாரணைக்குழுவுடன் பேச்சு நடத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலம் முடிவடையும் காலத்தை கடத்துவதற்கானதாக இருக்கலாம் என ஐ.நா. அதிகாரிகள் கருதுவதாக டர்டில் பே இணையத்தளம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’