ழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் எவையும் கிடையாது என யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் கொலைகள் கொள்ளைகள் போன்ற வன்முறைகளை கட்டுப்படுத்துவது குறித்து இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
யாழ். மாவட்டத்தில் வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் எனக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் பாதாள உலகக் குழுக்கள் எவையும் கிடையாது. ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பும் சில நபர்களே கொள்ளைகள், களவுகளில் ஈடுபடுகின்றனர். உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவள்ள நிலையில் இத்தேர்தலை குழப்புவதற்கு சில குழுக்கள் முயற்சிக்கலாம்.
வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 24 மணித்தியாலமும் படையினர் மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் காலங்களின் வன்முறைகள் அதிகரித்தால் நரகப் பகுதிகளின் காவலரண்களில் உடற்சோதனைகளும் மேற்கொள்ளப்படலாம். பொதுமக்களின் பாதுகாப்பு இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’