வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 ஜனவரி, 2011

இலங்கைக்கு திரும்பிச் செல்லும் தமிழர்களுக்கு ஆபத்து இல்லை:கனடா

னடாவில் அகதி அந்தஸ்து கோருவோருக்கு பாதகமானதொரு புதிய கொள்ளையை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ளது.
Read:  In English 

இந்நிலையில் கனடாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களுக்கு அவர்கள் தமிழர் என்பதற்காக உயிராபத்து ஏற்படப்போவதில்லை என அந்தப் புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேசமயம், இந்த புதிய வழிகாட்டலை ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் அகதிகள் சபை விசாரணையாளர்களுக்கு இல்லை. ஆயினும் தேவைக்கேற்ப ஒரு உறுதியான ஒரு மாதிரியுருவாக இந்த வழிகாட்டல் அமையலாம் என குடிவரவு மற்றும் அகதிகள் சபை கூறியுள்ளது.
இந்தப் புதிய கொள்கை பின்பற்றப்படுமிடத்து ஓஷன்லேடி, எம்.வி. சன்சீ ஆகிய கப்பல்களில் வந்தோருக்கு இது பாதகமாக அமையும். ஆனால் இந்தப் புதிய வழிகாட்டல் குறிப்பு சட்டரீதியான வலுவுடையதல்ல என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
பொதுப் பிரச்சினைகள் காரணமாகக் காட்டி கனடாவில் அகதி அந்தஸ்து கோருவதை ஏற்க முடியாது என குடிவரவு மற்றும் அகதிகள் சபை தெரிவித்துள்ளது. இந்த புதிய வழிகாட்டலை எதிர்த்து லோன்வல்ட்மன் என்ற சட்டத்தரணி பெடரல் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’