வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 27 ஜனவரி, 2011

வாக்களிப்பு திகதி அறிவிப்பு


லங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடத்தப்படும் என்று இலங்கை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
வேட்பு மனுக்களை ஏற்பதற்கான கால எல்லை வியாழக்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்தே இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார்
.அதேவேளை விண்ணப்பங்களில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை உட்பட பல அரசியல் கட்சிகளின் பல மனுக்கள் பல சபைகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ், கிளிநொச்சி மாவட்டங்கலில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கான ஆளும் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நுவரெலியா பிரதேச சபை மற்றும் தலவாக்கலை நகரசபைக்கான ஆளும் கட்சியின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச சபைகளுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 2 பிரதேச சபைகளுக்கான மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்த சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழக்கவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்.
இதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் முறையான இணக்கப்பாடு இல்லாத நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டிருக்கின்றார்.
ஆளும் கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட வேறு சில கட்சிகளினதும் வேட்பு மனுக்கள் உரிய நடைமுறைக்கு அமைய தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் அவைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக யாழ் தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியும் யாழ் அரசாங்க அதிபருமாகிய திருமதி இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.
இதற்கிடையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு உட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிடுவதற்கு ஆளும் கட்சியின் முக்கியஸ்தராகிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்காவின் தலைமையிலான பிரஜைகள் குழு வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. இதில் துணுக்காய் பிரதேச சபைக்கான வேட்பு மனு தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’