வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

இணக்க அரசியலின் கதவுகளை மூடிவிட நாம் விரும்பவில்லை! வெற்றிலைச் சின்னத்திலேயே நாம் போட்டியிட விரும்புகிறோம்!!.


மிழ் மக்களின் அரசியலுரிமை சுதந்திரம் அபிவிருத்தி மற்றும் வாழ்வியல் உரி;மைகள் அனைத்தையும் அடைவதற்கு சாத்தியமான ஒரேயொரு வழிமுறையான இணக்க அரசியலுக்கான கதவுகளை மூடிவிட விரும்பாத நாம் நாட்டின் இடதுசாரிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் இணைந்து கொள்ளும் பொதுச் சின்னமாகிய வெற்றிலைச் சின்னத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதே ஆரோக்கியமானதாகும்.

உரிமை என்பது வெறுமனே பொழுது போக்கிற்காக பேசிக் கொண்டிருப்பதற்கான விளையாட்டுப் பொருள் அல்ல. எமது மக்களின் அவலங்களை வைத்து சுயலாப அரசியல் நடத்தும் வேலையும் அல்ல. அது அடைந்தே தீர வேண்டிய எமது மக்களின் மாபெரும் சொத்தாகும்.
உரிமைகளைப் பெற்றுத்தருவோம் என்று வெறுமனே வீரம் பேசிய வாய் வீச்சுக்களின் விளைவுகள் யாவும் எமது மக்களின் மீது அழிவுகளையும், அவலங்களையுமே சுமத்தி விட்டுச் சென்றிருக்கின்றன.
உரிமைகளை அடைவதற்கு கடந்த காலங்களில் கனிந்து வந்த சந்தர்ப்பங்கள் யாவும் சுயலாப சக அரசியல் தலைமைகளால் தவறவிடப்பட்டிருக்கும் நிலையில்..
இதனால் எமது மக்கள் பேரழிவுகளையும், பெருந்துயரங்களையும் சந்தித்து பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ஒரு சூழலில்..
எஞ்சியிருக்கின்ற ஒரேயொரு நடைமுறைச் சாத்தியமான வழிமுறையான இணக்க அரசியல் மூலம் நாம் இழந்தவைகள் அனைத்தையும் பெறுவோம் என்ற நம்பிக்கையோடு நாம் அயராது உழைத்து வருகின்றோம்.
யாருடன் பேசி எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமோ அவர்களுடன் உறவுக்கு கரம் கொடுத்தே எமது மக்களின் உரிமை முதற்கொண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து நாம் உழைத்து வருகின்றோம்.
அரசாங்கத்திற்கும் எமது மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை நாமே உருவாக்கியிருக்கின்றோம். இதை உடைத்துப்போட எமக்கு சம்மதமில்லை. இருக்கின்ற வழிமுறையை உடைத்து எமது மக்களுக்கு துரோகமிழைக்கவும் நாம் விரும்பவில்லை.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தி செய்வதற்காகவே நடத்தப்படுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்தே அபிவிருத்தி பணிகளில் ஈடுபட முடியும். அரசாங்கமே அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் வழங்க முடியும்.
ஆகவே எமது மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து வரும் நாம் எமது வரலாற்று வாழ்விடங்களின் அபிவிருத்தி பணிகளிலும் ஈடுபடுவதற்காக ஆளும் அரசாங்கத்தின் பிரதான கட்சியும் பங்கெடுக்கும் பொதுச் சின்னமாகிய வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது எனத் தீர்மானித்திருக்கின்றோம்.
அரசாங்கத்துடனான எதிர்ப்பை காட்டுவோம் என்று சுயலாப தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுக்கும் உதவாத எதிர்ப்பு அரசியல் வாக்குறுதிகளை வழங்குவது போல் அன்றி அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டை மேலும் வளர்த்து எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் நாம் பொதுச் சின்னமாகிய வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றோம்.
அபிவிருத்தி முதற்கொண்டு அரசியலுரிமை மற்றும் தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமை பிரச்சினை வரையில் அரசாங்கத்துடன் பேசித்தீர்க்கும் இணக்க அரசியல் ஊடாகவே எதனையும் சாதிக்க முடியும் நாம் அதற்காகவே பொதுச் சின்னமாகிய வெற்றிலைச் சின்னத்தை தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’