வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 ஜனவரி, 2011

வெள்ளம் வடிந்து மக்கள் ஊர் திரும்புகின்றனர்

லங்கையில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களை விட்டு வெளியேறியிருந்த மக்கள், வெள்ளம் வடிந்துவரும் நிலையில், தற்காலிக முகாம்களில் இருந்து தொடர்ந்து வெளியேறி சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
திங்கட்கிழமை அன்றைய நிலவரத்தின் படி, ஐம்பதாயிரம் பேர் தற்காலிக கூடாரங்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மழைவெள்ளத்தின் காரணமாக கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற நேர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அவசர அவசரமாக வெளியேறியதில் தங்களுடைய உடைமைகள் பலவற்றை விட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.
அவை தற்போது வெள்ளத்தால் சேதப்பட்டிருப்பதை அவதானித்தபடி இவர்கள் ஊர் திரும்பிவருகின்றனர். இவர்கள் வளர்த்துவந்த கால்நடைகளும் வெள்ளத்தில் பலியாகியிருந்தன.
தேசிய அளவில் இந்த வெள்ளத்தால் கிட்டத்தட்ட நாற்பது பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஏராளமான விளைநிலங்களும் நீரில் மூழ்கி பயிர்கள் நாசமடைந்துள்ளன.

ஐ.நா. உயர் அதிகாரி வருகை

இதனிடையே ஐ.நா.வின் மனிதாபிமான உதவி பணிகளுக்கான தலைமைச் செயலர் கேதரின் ப்ராக் வரும் புதன்கிழமை அன்று இலங்கைக்கு வரவிருக்கிறார் என்று தெரிவ்க்கப்படுகிறது
மூன்று நாள் பயணமாக வருகின்ற அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், யுத்தத்தால் இடம்பெயர்ந்து தற்சமயம் வடக்குப் பகுதிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ள மக்களையும் பார்வையிடுவார் என்று ஐ.நா.மன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’