கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உலர் உணவு நிவாரணம் இன்று தொடக்கம் வழ ங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவ ட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட மாநாட்டின்போதே அமைச்சர் அமரவீர மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமைத்த உணவு வழங்கப்படல் வேண்டும். சமைத்த உணவு வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட நிதியாக இருபது மில்லியன் ரூபா ஆரம்பக்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடியாக அனைவருக்கும் உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். அதற்கான பணிப்புரையை மாவட்ட அரசாங்க அதிபருக்கு விடுக்கின்றேன். வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாத்திரம் ஏற்கனவே சமைத்த உணவு வழங்கப்பட்டது.
இந்த முடிவு தற்போது மாற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் மற்றும் வீட்டில் சமைக்க முடியாதவர்கள் அனைவருக்கும் சமைத்த உணவு வழங்குவதற்கான முடிவை அரசாங்க எடுத்துள்ளது.
வீடுகளில் குசினிப் பாத்திரங்கள் உடைந்து வெள்ளத்தினால் சேதமடைந்தவர்களுக்கு குசினி சமையல் பாத்திரங்கள் வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வெள்ளத்தினால் மரணித்தவர்களின் மரணச் சடங்குகளின் அடக்கச் செலவுகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாகவும் அவர்களுக்கான நிவாரண நடவடிக்கையை துரிதப்படுத்துமாறும் என்னிடம் பணித்துள்ளார் என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’