வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 ஜனவரி, 2011

நம்பிக்கையுடன் இருங்கள். வலி. வடக்கு மீள்குடியேற்ற மக்கள் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.

லிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற மக்கள் பிரதிநிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றையதினம் மாலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் பணிமனைக்கு வருகை தந்த மேற்படி குழுவின் தலைவர் நடராஜா செயலாளர் மனோகரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் தமது மீள்குடியேற்றம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இச்சமயம் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குடாநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதையும் தொடர்ந்து இடம்பெற்று வருவதையும் சுட்டிக்காட்டியதுடன் அவர்களை நம்பிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

தற்சமயம் மீள்குடியேற்றத்திற்கு பிரதான தடையாக கண்ணிவெடி அபாயம் காணப்படுவதை எடுத்துரைத்த அமைச்சரவர்கள் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் ஆளணி பற்றாக்குறை மீள்குடியேற்றத்திற்கு ஓர் பிரதானமான பிரச்சினையாக இருப்பதையும் எடுத்துக்கூறினார். எவ்வாறாயினும் சிறிது கால அவகாசம் தேவையாக இருப்பதை தெரியப்படுத்திய அவர் எவ்வாறு வயாவிளான் மகாவித்தியாலயத்தை திறந்து சிறிது காலத்தின் பின்னரே தற்சமயம் முழுமையாக இயங்கச் செய்ய முடிந்துள்ளதையும் நினைவுகூர்ந்தார். எனவே இன்னமும் மீள்குடியேற உள்ள மக்களை நம்பிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற மக்கள் பிரதிநிகளிடம் அமைச்சரவர்கள் தெரிவித்துக்கொண்டார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’