ஜோர்ஜ் மாஸ்டர் ,தயாமாஸ்டர் உட்பட 11968 புலி உறுப்பினர்களும் படையினரிடம் சரணடைந்தனர்.
அவர்களில் 5600 பேரை புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தியுள்ளோம். தமிழ்ச்செல்வன், பிரபாகரன், சூசையின் உறவினர்களும் படையினரிடம் சரணடைந்தனர்.
அவர்களை நன்றாகவே கவனித்தோம். சரணடைவோரை நன்றாக கவனிக்குமாறே நான் அறிவுறுத்தியிருந்தேன் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்தார்.
புலிகளின் அரசியல் பிரிவின் பெண் பொறுப்பாளர் சரணடைந்துள்ளார்.
அக்காலப்பகுதியில் பொய்பிரசாரங்களை மேற்கொண்ட ஐந்து வைத்தியர்களும் சரணடைந்துள்ளனர். அவ்வாறானவர்களை புனர்வாழ்வளித்துள்ளோம், பலரை சேவையில் இணைந்துக்கொண்டுள்ளோம்.
சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். சரணடைய வருகின்ற எவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்துமாறு உத்தரவிடவில்லை என்பதுடன் இந்த செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என்றார்.
வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.
மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கின் நான்காவது சாட்சியான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று சாட்சியமளித்தார். அவரின் சாட்சியத்தை பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார நெறிப்படுத்தினார்.
கேள்வி:தற்போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்?
பதில்:ஆம்.
கேள்வி:எவ்வளவு காலம் சேவையாற்றுகின்றீர்கள்? பதில்:2005 நவம்பர் மாதம் முதல் இன்று வரையிலும்.
கேள்வி: முப்படைகளும் ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்றது.
பதில். ஆம்.
கேள்வி: கடமை மற்றும் நிர்வாகம்,கொள்கையளவில் படையினர் இணைந்து செயற்படுகின்றனர் என்றால் தவறில்லை?
பதில். ஆம்.
கேள்வி:2009 ஆம் ஆண்டு வருடமுழுவதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தீர்கள்?
பதில்:ஆம்.
கேள்வி:2005 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக தெரிவு செய்யப்படவேளையில் (எல்.ரி.ரி.ஈ)புலிகள் இலங்கையில் செயற்பட்டனர் என்பதும் தவறில்லை?
பதில்:ஆம்.
கேள்வி:புலிகளை சர்வதேச மட்டத்தில் பல நாடுகள் தடைச்செய்திருந்தன?
பதில்: ஆம்.
கேள்வி: புலிகள் இயக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது? பதில்: ஆம்.
கேள்வி:புலிகள் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே பிரபலமாக செயற்பட்டிருந்தனர்?
பதில்: ஆம்.
கேள்வி:புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதனை காண்பிப்பதற்கு முயற்சித்தனர்?
பதில்:ஆம்.
கேள்வி:வடக்கு கிழக்கில் வாழ்கின்ற பிரஜைகளில் பெரும்பாலானோர் தமிழர்கள்?
பதில்: ஆம்.
கேள்வி:புலிகள் படையணியின் உறுப்பினர்கள் தமிழ் மக்களை சேர்ந்தவர்கள்?
பதில்: ஆம்.
கேள்வி:2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது?
பதில்:ஆம் அப்படித்தான்.
கேள்வி: இந்த நடவடிக்கை 2009 ஆம். ஆரம்பத்தில் தீர்க்கமான நிலையில் இருந்ததை ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்:ஆம்.
கேள்வி: புலிகளின் நிர்வாகத்தின் கீழிருந்த ஒவ்வொரு நிலப்பரப்பும் 2009 ஆம் ஆண்டு மே 17,18 ஆம் திகதிகளில் அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது என்றால் அது தவறில்லை?
பதில்: ஆம்.
கேள்வி: முப்படைகளின் படைநடவடிக்கை தொடர்பில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டியதா?
பதில்: ஆம்.
கேள்வி:2009 ஆம் ஆண்டு இராணுவத்தளபதி யார்?
பதில்:சரத்பொன்சேகா.
கேள்வி:நீதிமன்றத்தில் இருக்கின்றாரா? இனங்காட்டமுடியுமா? பதில்:ஆம்.ஆம்.
கேள்வி:2009 ஆம் ஆண்டு மே மாதம் இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகா 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் படைகளின் பிரதானி என்ற பதவியை வகித்தார் என்பது தவறில்லை?
பதில்: ஆம்.
கேள்வி:2009 ஆம் ஆண்டு பின்பாதியில் அவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார் என்றாலும் தவறில்லை?
பதில்: ஆம்.
இதன்போது 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வெளியான சண்டே லீடர் பத்திரிகை சாட்சியிடம் காண்பிக்கப்பட்டது.
கேள்வி: இந்த பத்திரிகையின் செய்தியை இதற்கு முன்னர் பார்த்திருக்கின்றீர்களா? வாசித்தும் பார்த்தீர்களா?
பதில்:ஆம்.ஆம்.
கேள்வி:செய்தி தொடர்பில் ஏதாவது கூறமுடியுமா?
பதில்: முழுமையாக பொய்யானதாகும். உண்மையில்லாத குற்றச்சாட்டுகள். அதேபோல தவறான தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
கேள்வி:செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற எந்தவொரு விடயத்தையும் உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது அப்படித்தானே?
பதில்: முடியாது.
கேள்வி:வெள்ளைக்கொடியுடன் சரணடைய வரும் புலிகளை சுடுமாறு படையணியின் கட்டளையிடும் தளபதி சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டிருந்தீர்களா?
பதில்: நடேசன், ரமேஷ்,புலித்தேவன் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வரும்போது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளுமாறு நான் உத்தரவிட்டது என்பது பொய்.
கேள்வி: உங்களுடைய கடமைநேரத்தின் போது எந்தவொரு அதிகாரிக்கும் இவ்வாறான உத்தரவொன்றை பிறப்பிக்கவில்லை?
பதில்:சரணடைய வருகின்ற எவரையும் நன்றாக கவனிக்குமாறு அறிவுறுத்தினேன். புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்கள் சட்டரீதியாக மதிக்கப்பட்டனர். 11968 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். 5600 பேரை புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தியுள்ளோம்.
ஜோர்ஜ் மாஸ்டர், தயாமாஸ்டர், பெண்கள் அரசியல் துறை பொறுப்பாளர், இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அந்த காலப்பகுதியில் பொய் பிரசாரங்களை செய்துகொண்டிருந்த ஐந்து வைத்தியர்களும் சரணடைந்துள்ளனர். அவர்களுக்கு புனர்வாழ்வளித்து சிலரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம். சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கேள்வி:ரமேஷ், புலித்தேவன்,நடேசன் ஆகியோர் புலிகளின் செயற்பாட்டு தலைவர்களாவர்? பதில்:பல்வேறு பிரிவுகளில்...
கேள்வி: அவ்வாறு ஏதாவது சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்?பதில்: நிச்சயமாக தெரிந்திருக்கும்.
கேள்வி:எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது இவ்வாறு நடந்ததா?
பதில்:இன்று வரையிலும் இல்லை.
கேள்வி: புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இறுதிக் காலத்தில் நடந்ததாக அச்செய்தியில் கூறப்படுகின்றதே?
பதில்:ஆம்.
கேள்வி:2009 ஆம் ஆண்டு நவம்பரில் சரத்பொன்சேகா இராணுவத்தில் சேவையில் இருந்தார்?
பதில்:ஆம்.
கேள்வி:அக்காலப்பகுதியில் எந்தவொரு அதிகாரிக்கும் கட்டளையிடப்படவில்லை?
பதில்: ஆம்.
கேள்வி:11968 புலிகள் படையினரிடம் சரணடைந்தனர்?
பதில்: ஆம்.
கேள்வி:இறுதிக்காலத்தில் பொதுக்களுடன் இணைந்தே வந்தனர்?
பதில்: ஆம்.
கேள்வி: புனர்வாழ்வளிப்பதற்கு திட்டமிட்டிருந்தீர்கள்?
பதில்: ஆம்.
கேள்வி: ஜோர்ஜ் மாஸ்டர், தயாமாஸ்டர் புலிகளின் தலைவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
பதில்:ஆம்.
கேள்வி:இருவர் சரணடைந்தனர். அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் பாதுகாப்பாக இருக்கின்றனர்?
பதில்:ஆம்.
கேள்வி:தமிழ்ச்செல்வன் என்றொருவர் இருந்தார் என்பது தெரியுமா?
பதில்: ஆம்.
கேள்வி:தமிழ்ச்செல்வனின் நெருங்கிய உறவினர்களும் சரணடைந்தனர் என்பது தெரியுமா? பதில்: தமிழ்ச்செல்வனின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்ல பிரபாகரன், சூசை ஆகியோரின் உறவினர்களும் படையினரிடம் சரணடைந்தனர்.
கேள்வி:அவ்வாறானவர்களுக்கு அரசாங்கம் சட்டரீதியான பாதுகாப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததா?
பதில்: ஆம்.
கேள்வி:பாதுகாப்புடன் இந்நாட்டில் வாழ்கின்றனர்? பதில்: ஆம்.
கேள்வி:வெளிநாடுகளில் இலங்கை தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்?
பதில்:ஆம், 1983 ஆம் ஆண்டிலிருந்து கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கு வாழ்கின்றனர்.
கேள்வி:சிலருக்கு இலங்கை பிரஜாவுரிமை இருக்கின்றது?
பதில்:சிலர் அந்நாட்டின் பிரஜைகளாகவும் பலர் இலங்கை பிரஜைகளாகவும் இருக்கின்றனர்.
கேள்வி:செய்தி வெளியானதன் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் ஏதாவது வெளிப்படுத்தினரா? பதில்: இந்த செய்தியினால் மிகப்பெரியளவிலான பல விடயங்கள் நடந்தன. பாரியளவில் எதிர்ப்பலைகள் கிளம்பின. எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டன. சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
செய்தி வெளியானதன் பின்னர் அதன் இடைக்கால பெறுபேற்றை இராணுவத்தினர், நாடு மட்டுமன்றி தனிநபர் என்ற ரீதியில் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த காரணத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சர்வதேச நிறுவனங்கள் இதுதொடர்பில் தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்துவந்தன. பல நாடுகள் அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தன. தமிழ் மக்களுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
கேள்வி: தமிழ் மக்களுக்கும் ஏனைய இன மக்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது?
பதில்: ஆம்.
கேள்வி:அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் விரிசலை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது?
பதில்: ஆம்.
கேள்வி:அதனால் தான் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவும் நிறுவப்பட்டது?
பதில்:ஆம்.
கேள்வி: விசாரணைக்கு முகம் கொடுத்தீர்கள்?
பதில்: செய்தி வெளியானதன் பின்னர் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த விடயம் வேறு யாரும் கூறுவதுபோன்றதல்ல. இராணுவ தளபதி கூறியதனால் பலரும் இந்த விடயம் உண்மையானது என்றே நினைத்திருந்தனர். என்னிடம் விசாரிக்கும் போது மேற்படி விடயம் உண்மையில்லை என்று கூறினாலும் இராணுவத்தளபதி கூறியதனால் அது பெரும் பிரச்சினையாகவே இருந்தது.
கேள்வி: 2010 ஜூன் 15 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வாக்குமூலமளித்துள்ளீர்கள்?
பதில்:ஆம்.
இந்த கேள்வியுடன் பிரதிசொலிஸிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார சாட்சியை நெறிப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டார் அதனையடுத்து பிரதிவாதியின் சட்டத்தரணியான நளீன் லது ஹெட்டி குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’