வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 ஜனவரி, 2011

நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை திருப்பியனுப்ப சுவிஸ் தீர்மானம்

ரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை கிறீஸுக்கு திருப்பியனுப்புவதை சுவிட்ஸர்லாந்து குடிவரவு அலுவலகம் இடைநிறுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக சுவிட்ஸர்லாந்திலேயே விசாரணைகளை நடத்தவுள்ளது. இதேவேளை இலங்கைக்கு அகதிகளை திருப்பியனுப்புவதை சுவிட்ஸர்லாந்து விஸ்தரிக்கவுள்ளது.

இலங்கையில் பாதுகாப்பு நிலைமை தெளிவான வகையில் முன்னேற்றமடைந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து குடிவரவு அலுவலகம் தெரிவித்துள்ளது. எனவே இலங்கையின் வடக்கு மற்றும் மேற்கிலிருந்து வரும் தஞ்சம் கோருவோர் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் பிரச்சினைக்குரிய வன்னிப் பிராந்தியம் இதற்கு விதிவிலக்கானது எனவும் அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.
2011 ஜுன் மாதத்திலிருந்து தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை ஒவ்வொன்றாக பரிசீலிக்கவுள்ளது. தற்போது சுhமர் 2,200 பேருக்கு தற்காலிகமாக சுவிஸில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’