வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 ஜனவரி, 2011

அனைத்து தமிழ் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட த.தே.கூ.விடம் ஆனந்தசங்கரி கோரிக்கை



திர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது ஏனைய சிறிய தமிழ்க் கட்சிகளையும் உள்வாங்கிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரப்போகும் தேர்தல் அரச சார்பானவர்களுக்கும் எமக்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல் மட்டுமல்ல. பலப்பரீட்சையும் கூட. அரசுடன் மோதும் அளவுக்கு பலப்பரீட்சை நடத்தப்போவதில்லை. ஆனால் அரசுடன் பேசுவதற்கு ஒரு பலம் மிக்க அமைப்பை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பதே இந்த வேண்டுகோளுக்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குற்றிப்பிடப்பட்டுள்ளதாவது, 'தற்போது தேர்தல் களத்தில் நிலவுகின்ற நிலைமைகளை உற்றுநோக்கினால் எமது இனத்துக்கு எந்தவொரு விமோசனமும் கிடைக்கப்போவதில்லை என்று மட்டும் தெட்டத் தெளிவாகின்றது.
இவ்வளவு அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்த பின்னும் கூட தமிழர்கள் ஒன்றுபடவில்லையே என மாற்று இனத்தவரும் சர்வதேச சமூகத்தினரும் எள்ளிநகையாடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
தமிழீழமே தருகின்றோம். ஒரு கிழமைக்காவது தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறினால் கூட ஒன்றுபடமாட்டார்கள் போல் தெரிகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் எல்லாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வந்த நோக்கமே மேலே கூறப்பட்ட காரணங்களாகும்.
ஒன்றிணைந்துச் செயற்படுவதற்கு தயாராக உள்ள சில அமைப்புக்களை ஏதோ ஒரு சில காரணங்கள் காட்டி உள்வாங்கப்படாதிருப்பதே எமது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது என்பதை உணர முடிகின்றது.
நான், இரா சம்பந்தனுக்கு சிலவற்றை ஞாபகமூட்ட விரும்புகின்றேன். அதாவது வரப்போகும் தேர்தல் அரச சார்பானவர்களுக்கும் எமக்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல் மட்டுமல்ல. பலப்பரீட்சையும் கூட. அரசுடன் மோதும் அலவுக்கு பலப்பரீட்சை நடத்தப்போவதில்லை. ஆனால் அரசுடன் பேசுவதற்கு ஒரு பலம் மிக்க அமைப்பை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பதே.
மீண்டும் ஒரு தடவை நான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வினயமாக வேண்டுவதும் மக்கள் விரும்புவதும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி, சிவாஜிலஙை;கம் சார்ந்துள்ள தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, ரெலோ சபாரத்தினம் அணி, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் உட்பட அனைத்து அமைப்பினரையும் இணைத்து ஒரு சில ஆசனங்களையேனும் வழங்கி, அவர்களை உள்வாங்க வேண்டும் என்பதே.
எம்மை பொருத்தளவில் எது நடப்பினும் எமது தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து விலகாது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை. ஏனையோரை ஒன்றிணைக்கும் பணியினை நிறைவேற்றுவேன்.
எம்மைப் பொருத்தளவில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் தரத் தயாராக உள்ளோம். எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இன்னும் காலம் கடந்து போகவில்லை என்ற காரணத்தினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்ப்பீடம் ஒரு நல்ல முடிவினை எடுத்து துன்பத்தில் துவலும் எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
விரக்தி ஏற்பட்டு அதிகப் பலன் தராத ஒரு முடிவினை எடுக்காது பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு இதுவரை அணியில் சேராத அமைப்பினரை எமது மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்' என்று அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’