யாழ்ப்பாணத்தில் இரவு 11 மணிக்கு பின்னர் அநாவசியமாக நடமாடுபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என யாழ். பொலிஸ் அத்தியட்சகர் நமீல் பத்மகே கூறியுள்ளார்
.யாழ். நகரில் தொடரும் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவே இந்நடைமுறை இன்றுமுதல் அமல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இரவு 11 மணியின் பின்னர் யாழ். நகர வீதிகளில் குழுக்களாகவும் சந்தேகத்திற்கிடமாகவும் நடமாடுபவர்களை கைதுசெய்து விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’