வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 ஜனவரி, 2011

மிதிவெடிகளை அகற்றும் பணியாளர்களுக்கான விசேட கலந்துரையாடல்

மிதிவெடிகளை அகற்றுகின்ற பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டிருந்த மற்றும் தற்போது ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கான விசேட கலந்துரையாடலொன்று நாளைய தினம் (29.01.2010) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது.
யாழ்.குடாநாட்டில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதனை ஆக்கப் பூர்வமான செயற்பாடுகளாக்கும் நோக்கத்துடன் இடம்பெறவுள்ள இக் கலந்துரையாடலில் ஏற்கனவே மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு தற்போது பணியில் இல்லாதவர்களும் தற்போது மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவோரும் கலந்து கொள்ளலாம்.
இப் பணியாளர்களது நலன் கருதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இக் கலந்துரையாடலின் எதிர்பார்ப்பாகும்.
எனவே இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும்படி மேற்படி பணியாளர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’