வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 ஜனவரி, 2011

சுவிற்சர்லாந்தில் மரணமடைந்தவரின் உறவினர்களை கண்டுபிடிக்க உதவுங்கள்

சு
விற்சர்லாந்தில் அண்மையில் மரணமடைந்த சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவரின் உறவினர்களை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை நாடுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுவிற்சர்லாந்தை வதிவிடமாகக் கொண்ட இலங்கையரான சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவர் சுவிற்சர்லாந்து சூரிச்சிலுள்ள அவரது வசிப்பிடத்தில் 08.12.2010 அன்று இறந்த நிலையில் காணப்பட்டார் என சூரிச் பொலிஸ் ஜெனீவாவிலுள்ள எமது தூதராலயத்துக்கு அறிவித்துள்ளது.

இறந்தவர் பிறந்த திகதி: 20.07.1968 என்றும் கடவுச்சீட்டு இலக்கம்: ஆ 2176054 எனவும் மனைவியின் பெயர்: சத்தியசோதி குறிஞ்சிக்குமரன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை முகவரி: கைதடி மேற்கு, கைதடி, யாழ்ப்பாணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் பற்றிய விபரங்களை அறிய வெளிநாட்டு அமைச்சின் கொன்ஸியூலர் விவகாரப் பிரிவு பெருமுயற்சி எடுத்துவருகின்றது. இன்றுவரைக்கும் இறந்தவரது உறவினர்கள் எவரும் அவரது பூதவுடலைக் கோரி வரவில்லை என்பதுடன் எம்முடன் தொடர்புகொள்ளவும் இல்லை.
இறந்த குறிஞ்சிக்குமரனின் பூதவுடலை அடையாளம் காண்பதற்காக, அவரது உறவினர்களை கண்டுபிடிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு மக்களின் உதவியை நாடுகின்றது. இறந்தவரின் உறவினர் பற்றிய விபரங்களை தெரிந்தவர்கள் எங்களுடன் தொலைபேசியூடாக உடனடியாகத் தொடர்புகொண்டு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கொன்ஸியூலர் விவகாரப் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, இல.14, சேர் பாரோன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01. என்ற முகவரி ஊடாக அல்லது 0112437635 மற்றும் 0114718972 ஆகிய தொலை பேசி இலக்கங்கள் ஊடாகவோ அறிவிக்குமாறு கோருகின்றோம். மேலும் 0112473899 தொலைநகல் இலக்கம் ஊடாகவும் அறிவிக்கலாம்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’