வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் விற்க தயாராகிறது இலங்கை இராணுவம்

லங்கையில் தயாரிக்கப்பட்ட இராணுவ தளபாடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யத் தயாராகவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
புலிகளுக்கு எதிரான போரில் பெற்றுக்கொண்ட அனுபங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஆளில்லாத சிறிய உளவு விமானமும் இவற்றில் அடங்கும். பொது நிகழ்ச்சிகள் கூட்டங்கள் என்பவற்றை கண்காணிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைக்கும் இவ்விமானம் உதவக்கூடியது.
மார்ச் 31 முதல் ஜுன் 2 ஆம் திகதி முதல் இலங்கையில் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள , எல்.ரி.ரி.யை தோற்கடித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான சர்வதேச மாநாட்டிற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு இந்த இராணுவத் தளபாடங்கள் காட்சிப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.
இராணுவத்தைத் தவிர, கடற்படை, விமானப்படை ஆகியனவும்; தாம் தயாரித்த சில ஆயுதங்களை காட்சிப்படுத்தவுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’