வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 ஜனவரி, 2011

யாழ். மாவட்ட வாகன உரிமையாளர்களுக்கு தை மாத இறுதி வரை சலுகை அமைச்சர் நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் 2011ம் வருடத்திற்கான வாகன வரிகளைச் செலுத்தி அதற்குரிய பற்றுச்சீட்டுக்களை பெறாதவர்களுக்கு எதிராக பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்விடயம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது
இதனையடுத்து யாழ் மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் அவர்கள் தை மாதம் 31ம் திகதிவரையில் அவ்வாறு வாகன வரிகளைச் செலுத்தி பற்றுச்சீட்டுக்களைப் பெறாதவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் ஒரு நாளைக்கு குறிப்பிட்டளவு வாகனங்களுக்கான வரிகளை மாத்திரமே பெற்று பற்றுச்சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால் இதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாகாண சபை நிர்வாகம் இல்லாததன் காரணமாகவே இப்பகுதியில் இவ்வாறான நெருக்கடிகள் தோன்றியுள்ளது. ஏனைய மாவட்டங்களில் கடந்த வருட இறுதிக் காலப்பகுதிகளிலேயே வாகனங்களுக்கான வரி ஏற்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு டிசெம்பர் மாதம் 31 திகதிக்குள் அந்நடவடிக்கைகள் முழுமை பெற்றுள்ளன.

இந்நிலையில் யாழ் மாவட்டத்திலுள்ள வாகன உரிமையாளர்கள் இம்மாத இறுதிக்குள் தங்களது பிரதேச செயலகங்களில் உரிய வாகன வரிகளைச் செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’