வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 ஜனவரி, 2011

ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எனக்கூறி மோசடி செய்த நபர் கைது

னாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுவதாக கூறிக்கொண்டு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து 150 இளைஞர் யுவதிகளிடம் பண மோசடி செய்த ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்தனர்.

இவர் மேற்படி இளைஞர் யுவதிகளிடம் சுமார் 60 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரிடமிருந்து மூன்று அடையாள அட்டைகள், இராணுவ சீருடை, ஜனாதிபதி செயலகத்தின் போலி கடிதத் தலைப்பு, இறப்பர் முத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்காக பொலிஸ் சான்றிதழ் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணை நடத்தியதையடுத்தே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய விக்கிரம தலைமையில் விசாரணைகள் நடைபெறுகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’