வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 ஜனவரி, 2011

அகதிகளாக வெளியேறிய பலர் நாடுதிரும்புவதற்கு விருப்பம்: யு.என்.எச்.சி.ஆர்

லங்கையில் போர் காரணமாக அகதிகளாக வெளியேறிய பலர் நாடுதிரும்ப விரும்புகிறார்கள் என்று ஐ.நா.வின் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அப்படி வருபவர்களுக்கு உதவிசெய்யும் நடவடிக்கைகளை தாங்கள் மேலும் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

போருக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டு இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் நாடுதிரும்பியுள்ளனர் என்று இலங்கையில் இருக்கும் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் துணை வதிவிடப் பிரதிநிதி ஜெனிபர் பகோனஸ் தெரிவித்துள்ளார்.
அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமான அளவில் உயரும் என்று தாங்கள்நம்புவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
நாடுதிரும்புவர்கள் இலங்கையில் தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்கிற சூழல் ஏற்படுமாயின் பலர் மீண்டும் அங்கு திரும்பத் தயாராக இருப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளனர் எனவும் ஜெனிபர் பகோனஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், வெளிநாடுகளில் வாழும் அகதிகள் நாடுதிரும்புவது அவர்களது சொந்த முடிவு என்றும், அப்படி விரும்புகிறவர்களுக்கு உதவிகளை செய்ய தமது அமைப்பு முன்வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’