வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 ஜனவரி, 2011

சந்திரிக்கா, ரணில் சாட்சியமளிக்க நல்லிணக்க ஆணைக்குழு அழைப்பு

ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி.அத்துகொட இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் இதுவரை அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என அத்துகொட கூறினார்.
ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆணைக்குழுவின் செயலாளர் தொலைபேசி மூலமும் எழுத்து மூலமும் அழைப்பு விடுத்திருந்தார். எனினும் அவர் நிராகரித்துவிட்டார்.
இதனையடுத்தே ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா கையெழுத்திட்டு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களான மிலிந்த மொரகொட ரோஹித போகொல்லாகம ஆகியோருக்கும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு அழைப்புவிடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’