வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 ஜனவரி, 2011

பெண்களின் கண்ணீரில் ஆண்களின் பாலியல் உணர்வை அடக்கும் சக்தி

ண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண்களின் கண்ணீருக்கு உள்ளதாக இஸ்ரேலிய வீஸ்மான் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று தமது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது
.பெண்களின் கண்ணீரில் அடங்கியுள்ள சில வேதியற் பொருட்களே இதற்கான காரணமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எலிகள் போன்ற சில உயிரினங்கள் கண்ணீரின் மூலம் இரசாயன ரீதியாக தொடர்பாடலில் ஈடுபடுவதாகவும் குறிப்பாக ஆண் எலிகளின் கண்ணீரானது ஒருவகை புரதத்தினை கொண்டுள்ளதாகவும் இதுபெண் எலிகளை புணர்ச்சியில் ஈடுபடுவதற்குத் தூண்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது பெண்களின் கண்ணீரின் மணமானது அவர்களை ஆண்களிடத்தில் கவர்ச்சியற்றவர்களாக உணரவைத்ததாகவும் ஆண்களின் இதயத்துடிப்பு வீதம், தோலின் உஷ்ணம், தெஸ்தெஸ்தரோன் சுரப்பு வீதம் ஆகியவற்றைக் குறைத்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக ஆண்களுடைய மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளான ஹைப்போதலமஸ், பியுசிபோர்ம் ஜயிரஸ் ஆகியவை காம உணர்வின் போது தூண்டப்படுவதாகவும் ஆனால் பெண்களின் கண்ணீரை நுகர்ந்தபோது மூளையின் இப் பகுதி நரம்புகளின் செயற்பாடுகள் குறைவடைந்ததாகவும் அவர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் இன்னும் பல ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’