வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

94 வயதில் குழந்தை பெற்று உலக சாதனை படைத்த விவசாயி

ந்தியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 94 வயதில் குழந்தை பெற்று உலகிலேயே மிகவும் முதிர்ந்த வயதில் குழந்தை பெற்றவர் என்ற சாதனைக்கு உரியவராகியுள்ளார். அவர் இன்னும் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ரமித் ராகவ் எனும் விவசாயியே இவ்வாறு முதிர்ந்த வயதில் தந்தையாகியுள்ளார். அவரது தனது 94 ஆம் வயதில் முதல் குழந்தை பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.
ராகவ், வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். தனக்குப் பிறந்த ஆண் குழந்தை கரம்ஜித்தை கடவுள் அளித்த பரிசு என அவர் கருதுகின்றார்.
அவரும் அவரது மனைவி சகுந்தலாதேவியும் அடுத்த வருடம் தமது இரண்டாவது குழந்தையை பிரசவிக்கலாம் என நம்புகின்றனர். சகுந்தலாதேவி 40 களின் பிற்பகுதியில் உள்ளார்.
ராகவ் இளமைக் காலத்தில் மல்யுத்த வீரராக விளங்கியுள்ளர். தனது குழந்தை பெரியவனாகும் வரை தான் உயிரோடு இருக்கமுடியும் என அவர் நம்புகிறார்.
'என்னை கருப்பு நாகம் கடித்தால் மட்டுமே நான் உயிரழப்பேன். அப்படி கடிப்பது சாத்தியமில்லாதது ' என அவர் தெரிவித்துள்ளார்.
'10 வருடங்களுக்கு பின்பு வந்துப் பாருங்கள். அப்போதும் நான் இதே தோற்றத்துடன் இருப்பதை நீங்கள் காணுவீர்கள்.
தினம் நான் 3 லீற்றர் பால், அரைகிலோ பாதாம் பருப்பு, அரைகிலோ நெய் என்பவற்றை உணவாக உட்கொள்கின்றேன்' என்கிறார் ராகவ்.
ஆனால் வைத்தியர்கள் சிலர் ராகவ் சொல்வதை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.
கார்கோடா வைத்தியாசலையில்தான் மேற்படி குழந்தை கடந்த வருடம் பிறந்தது. அவ்வைத்தியசாலையின் பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் பரம்ஜித் சிங் கருத்துத் தெரிவிக்கையில் "இவ்வளவு வயதில் குழந்தை பெறுவதற்கான சாத்தியம் வெகு தொலைவானது. ஆனால் அப்படி பிறக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது" என்றார்.
ராகவ் கூறுவது உண்மையாக இருந்தால், அவர் புதிய உலக சாதனையாளர் ஆவார். இந்தியாவைச் சேர்ந்த நானு ராம் ஜோகிm கடந்த 2007 ஆம் ஆண்டு, 90 ஆவது வயதில் தனது 21 ஆவது குழந்தையை பிரசவித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ராகவ் தனக்கு உண்மையில் 100 வயது கடந்துவிட்டது எனக் கூறுகிறார். ஆனால் அவரின் ஓய்வூதிய அறிக்கை அவரருக்கு 94 வயது என குறிப்பிடுகின்றது.
மேற்படி குழந்தை சுகப்பிரசவத்தின் மூலம் பிறந்ததாகவும் அக் குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் டாக்டர் பரம்ஜித் சிங் கூறுகிறார்.
சகுந்தலாவின் வயது 51, 52, 54 என பல ஆவணங்களில் வெவ்வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இந்த வயதில் கருத்தரிக்கக்கூடிய முட்டைகளைக் கொண்டிருப்பதற்கான சாத்தியம் குறைவு எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களின் கிராமத்தைச் சேர்ந்த கரன் சிங் எனும் 39 வயதான பெண் இச்சம்பவத்தை கேள்வியுற்றபோது அதர்ச்சியடைந்தாக கூறுகிறார்.
நான் இதை முதலில் நம்பவே இல்லை. அது கடவுளின் கருணை. அத்துடன் ராம்ஜித் சிங் ஆரோக்கியமாகவும் கடின உழைப்பாளியாகவும் உள்ளார்' என்கிறார் கரன் சிங்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’