வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 70 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மை பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்கக் வேண்டுமென கோரிக்கை விடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரத்தினம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று காலை அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பிரதிகள்- விவசாயதுறை அமைச்சர், கிழக்கு மாகாண சபை ஆளுனர், கிழக்கு மாகாண முதலமைச்சர், விவசாய அமைச்சர் கிழக்கு மாகாணசபை, அரசாங்க அதிபர் மட்டக்களப்பு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக இம்மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் முழ்கியது. இவ் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்கை ஸ்தம்பிதம் அடைந்தது. குறிப்பாக மீன்பிடி, வியாபாரம், கல்வி நடவடிக்கைகள், போக்குவரத்து, அரச நிர்வாகம், விவசாயச் செய்கை என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றில் விவசாயச் செய்கையில் மேட்டு நிலப்பயிர் செய்கை முற்றாக பாதிப்படைந்த நிலையிலும், வேளாண்மை செய்கையால் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகமாக வாகரை, வாழைச்சேனை, கிரான், வந்தாறுமூலை, ஏறாவூர், கரடியனாறு, ஆயித்தியமலை, மண்டபத்தடி, கல்லடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பளுகாமம் வெல்லாவெளி, மண்டுர், கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை போன்ற பிரதேசத்தில் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்த பாரிய மழை காரணமாக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியிருந்தன. இப்பகுதியில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் இருந்து 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் சில அமைப்புக்கள் என்னிடம் முறையிட்டனர்.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேட்டுகொள்கின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’