வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 டிசம்பர், 2010

கேரள கைப்பணிப்பொருட்கள் கண்காட்சியில் இலங்கை கைப்பணியாளர்கள்

ந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மல்லபுரம் பகுதியில் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கைப்பணிப்பொருட்கள் கண்காட்சியில் இலங்கையிலிருந்து 11 கைப்பணிப்பொருட்கள் தயாரிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி கலைஞர்களுக்கான விமான பயண அனுமதிச் சீட்டுக்களை இன்று வழங்கினார்.
இன்று காலை கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போதே இவர்களுக்கான விமான பயண சீட்டுக்கள் வழங்கப்பட்டன.
சார்க் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் மேற்படி கைப்பணிப்பொருட்கள் கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. இதில் கலந்துகொள்ளும் இலங்கைக் கலைஞர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது கேரளாவில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள காலப்பகுதி நிலவுவதால் தங்களது கைப்பணிப் பொருட்களைக் காட்சிப்படுத்தி அதன் மூலம் இலாபம் ஈட்டிக்கொள்வதுடன் மாத்திரம் நின்றுவிடாது பாரம்பரிய கைப்பணிப்பொருட்கள் சார்ந்த கேரளாவின் தொழில் நுட்பங்களையும் ஆராய்ந்தறிந்து அவற்றின் பிரகாரம் எமது கைப்பணித்துறையை மேம்படுத்த முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆலோசகர் திருமதி வீ.ஜெகராசசிங்கம் தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புத்திகீர்த்திசேன உட்பட அமைச்சு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி பயண ஏற்பாடுகளை அமைச்சுடன் இணைந்து தேசிய அருங்கலைகள் பேரவை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’