நாட்டின் பொருளாதார உயர்வுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஊடான பங்களிப்பை வழங்கி ஆசியாவின் அதிசயமான நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் கனவை நனவாக்க உதவுவோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இம்மாதம் 2ம் திகதியன்று கைப்பணிப் பொருட்கள் சந்தைப்படுத்தல் கிராமம் திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எமது அழைப்பை ஏற்று இங்கு பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களையும் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா அவர்களையும் ஏனைய கௌரவ அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் வரவேற்றுக் கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.
மகிந்த சிந்தனையின் அடிப்படையில் கைத்தொழில்கள் மூலம் இலங்கையின் பல வகைப்பட்ட கலாசார பாரம்பரியங்கள் பிரதிபலிக்கப்படுவதுடன் அவை வளர்த்தெடுக்கப்படவும் வேண்டும்.
இலங்கையில் மட்பாண்டம் சிறு இயந்திரம் மரத்தாலான பொருட்கள் தோல் உற்பத்தி உலோகம் உள்ளிட்ட பல்வகையான கைத்தொழில்கள் இருக்கின்றன.
எமது அமைச்சின் ஊடாக கைத்தொழில்கள் இலக்குகளுக்குத் தேவையான உள்ளீடுகளை பெற்றுக் கொடுப்பதிலும் மற்றும் உதவிகளை வழங்குவதிலும் சந்தை வாய்ப்பு அவர்களது நலன் சமுதாயப் பாதுகாப்பு என்பவற்றிலும் அக்கறை வருகின்றது.
கம்பஹாவில் 180 நாட்கள் வேலைத்திட்டமொன்றை கௌரவ அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களுடன் இணைந்து மேற்கொள்ள ஆவலாக இருக்கின்றோம். இந்தியாவின் நியூ டெல்லியில் உள்ளது போன்று கைத்தொழில் சந்தைப்படுத்தல் கிராமம் போல தேசிய அருங்கலைகள் பேரவை பத்தரமுல்லையில் அமைக்கப்படுவதுடன் கைத்தொழில் முன்னேற்றத்திற்கும் சுற்றுலா அமைச்சின் உதவியுடன் கைத்தொழில் சந்தைப்படுத்தும் கிராமங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதுடன் யுனிஸ்கோவால் இந்த சந்தைப்படுத்தல் கிராமம் கலாசார பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை பார்வையிட கொழும்புக்கு அண்மையாக உள்ள இடமாகவும் இந்த திகழ்கின்றது. இலங்கையில் அச்சுவேலி தொழிற்சாலை மற்றும் பனை அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவிய இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா அவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கின்றேன்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சானது சிறுகைத்தொழில் வளர்ச்சிக்காக உழைப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தின் உயர்வுக்கு எமது பங்களிப்பை வழங்குவதுடன் ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் கனவை நனவாக்க என்றென்றும் உதவுவோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’