நாடாளுமன்ற அமர்வை முறையாக நடத்திச் செல்ல அனுமதிக்காவிட்டால், நாள் முழுவதும் நாடாளுமன்றத்தை இடைநிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவேன் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எச்சரித்தார்.
இன்று காலையில் குழப்பநிலை ஏற்பட்டதால் சபை அமர்வு 15 நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. வார இறுதிப்பத்திரிகையொன்றுக்கு ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் மீண்டும் பிரச்சினை கிளப்பியதையடுத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’