காலஞ்சென்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உபதலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நூர்தீன் மசூர் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது இறுதி அஞ்சலிகளைச் செலுத்தினார்.
1962ம் ஆண்டு பிறந்த மன்னாரை சொந்த இடமாகக் கொண்ட நூர்தீன் மசூர் அவர்கள் தனது பாடசாலைக் கல்வியை எருக்கலம்பிட்டி மத்திய மகாவித்தியாலயத்திலும் தனது உயர் கல்வியை யாழ். பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தவராவார். 2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை அப்போதைய ஆட்சிக்காலத்தில் வன்னி புனர்வாழ்விற்கு உதவும் அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார். கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர் திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாரடைப்பு காரணமாக காலமானார்.
இன்று மாலை கொழும்பு பூங்கா வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது ஜனாசா வைக்கப்பட்ட நிலையில் அங்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது இறுதி அஞ்சலிகளைச் செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். இச்சமயம் அமைச்சர்கள் தினேஸ் குணவர்த்தன ரவூப் ஹக்கீம் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நூர்தீன் மசூர் அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்றிரவு மன்னார் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’