வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 3 டிசம்பர், 2010

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு லண்டனில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அளித்த விளக்கம்

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட்டில் ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையானது அவ்வமைப்பின் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள அழுத்தத்தைக் காட்டுகின்றது.

இது அவ்வமைப்பின் கோட்பாடுகளுக்கு முரணானது. கடந்த முறை ஜனாதிபதி சிறப்பானதொரு கருத்துப்பரிமாற்றலை மேற்கொண்டிருந்தார். ஆனால், இம்முறை அதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதி இங்கு ஆற்றவிருந்த உரையானது நாட்டின் அபிவிருத்தி மற்றும் எதிர்காலம் தொடர்பானது" என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் மாநாட்டைத் தொடர்ந்து அவர் ஊடகவியலார்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

கேள்வி : ஜானதிபதியின் உரை ரத்துச் செய்யப்பட்டதினை தொடர்ந்து பிரித்தானியா மற்றும் இலங்கையின் உறவு நிலை என்ன?

பதில்: இதற்கும் பிரித்தானியாவின் தொடர்பு எதுவும் இல்லை. பொலிஸார், அதிகாரிகளின் அறிவுரைக்கமைய பாதுகாப்பு காரணங்களுக்காக ஒக்ஸ்போர்ட் யூனியனே இதனை இரத்து செய்தது.

கேள்வி : இலங்கை தலைவர்கள் சிலர் மீதான விக்கிலீக்ஸின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: அரசாங்கத்தின் தொடர்பாடல் விடயங்கள் இரகசியமானவை. அவை தொடர்பிலான விடயங்கள் இராஜதந்திரரீதியில் ஆராயப்படுவதுடன், தவாறான எண்ணக்கருக்கள் நேரடியாக பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்க்கப்படும்.

கேள்வி : அரசாங்கம் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரனைக்கு செல்லாமைக்கான காரணங்கள் என்ன?

பதில்: இலங்கைக்கு ஏற்புடையதானதும் தேவையானதுமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி : பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சுயாதீன விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாரே ?

பதில்: அதற்காகத் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளது.

கேள்வி : நான் நினைக்கின்றேன் அவர் கூறியது சர்வதேச விசாரணைகளுக்காக என்று?

பதில்: இல்லை அவர் அவ்வாறு கூறவில்லை. உங்களது சொந்த எதிர்ப்பார்ப்பிற்காக எதனையும் திரிபுபடுத்திக்கூற வேண்டாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’