வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 29 டிசம்பர், 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைகளுக்கு முடியுமான வரை பங்களிப்பாற்றுவேன்! - அமைச்சர் யாப்பா

ந்நாட்டில் சகல இன மக்களும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழும் நிலையில்தான் அபிவிருத்தி நோக்கிப் பயணிக்க முடியுமென சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணத்தில் இன்று அரச மரக் கூட்டுத்தாபனத்தின் கிளையை திறந்து வைத்து உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் நிலவி வந்த பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு தற்போது அமைதிச் சூழல் நிலவுகின்றது.
இவ்வாறு பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டி தற்போதைய அமைதிச் சூழலை ஏற்படுத்தித் தந்தமைக்கு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்த நாட்டில் சகல மக்களும் இனம் மதம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழ வேண்டும். அப்போதுதான் அபிவிருத்திப் பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க முடியும்.
இன்றுள்ள சுமூகமான நிலையில்தான் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாணத்திற்கான கிளையைத் திறந்து வைக்கின்றோம். அத்துடன் இதேபோன்று கிளிநொச்சியிலும் கிளையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்நாட்டை உலகத்தின் சிறந்த நாடாக மாற்ற வேண்டும்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கை அமைச்சரவையில் மூத்த அமைச்சர் என்பதுடன் அவரது கோரிக்கைகள் தேவைகள் தொடர்பில் முடியுமான வரையில் பங்களிப்பாற்ற காத்திருக்கிறேன் என்றும் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
அத்துடன் சுகாதார விழிப்புணர்வு மாநாடு தொல்லியல் சார்ந்த மாநாடு என்பவற்றையும் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்த அவர் யாழ் மாவட்ட மக்கள் இந்நிலையத்தின் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.
முன்பதாக சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரச மரக் கூட்டுத்தாபனத் தலைவர் அமரசிங்க ஆகியோர் மங்கள வாத்தியம் சகிதம் வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வில் தேசியக் கொடியினை அனுர பிரிய தர்சன யாப்பா ஏற்றி வைக்க பெயர்ப்பலகையினை அமைச்சர் யாப்பாவுடன் இணைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
பிரதான கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு மங்கள விளக்கு அதிதிகளால் ஏற்றி வைக்கப்பட்டது.
பிராந்திய முகாமையாளரின் அலுவலகத்தில் சமய அனு~;டானங்களை அடுத்து அலுவலகக் கடமைகளை அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதியமைச்சர் அப்துல்காதர் ஆகியோர் சம்பிரதாயப்பூர்வமாகத் தொடக்கி வைத்ததுடன் ஏனைய பிரிவுகளும் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டன.
அரங்க நிகழ்வு அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் அமரசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமுகாமையாளர் குமாரசிங்க உரையாற்றியதைத் தொடர்ந்து சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதர் உரையாற்றுகையில் சுற்றாடல் துறையை முழு நாட்டிற்கும் அபிவிருத்தி செய்வது எதிர்காலத்திட்டமெனவும் மக்களுக்கான நற்பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறம்பட ஆற்றி வருகின்றார் என்றும் தெரிவித்தார்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றுகையில் யாழ்ப்பாண மக்கள் விறகு உள்ளிட்ட தேவைகளுக்கு மரங்களைப் பெற்றுக் கொள்வதில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வந்துள்ளனர். இக்கூட்டுத்தாபனம் திறந்து வைக்கப்பட்டுள்ள பட்சத்தில் அந்நிலை ஏற்பட மாட்டாது என்பதுடன் இத்தாபனத்தை யாழ் மாவட்டத்தில் திறந்து வைப்பதற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு மக்களின் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இல 25 கரையோர வீதி குருநகர் யாழ்ப்பாணத்தில் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் யாழ்பாணக் கிளை காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மகிந்த சிந்தனையின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கும் அதிமேதகு ஜனாதிபதியின் 2 வது பதவியேற்பு வைபவத்திற்கும் அமைய பிரதேச முகாமையாளர் காரியாலயம் மரவிற்பனை மத்திய நிலையம் உத்தியோகத்தரின் விடுமுறை விடுதி அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமரசிங்க அவர்களினதும் பணிப்பாளர் சபையினதும் அழைப்பிற்கிணங்க அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’