பிரெஞ்சு, லாகெனுவா நகரத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ.யின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வனின் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக வெளிவிவகார அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது
இவ்விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பந்துல ஜயசேகர இணையத்தளத்திற்கு தெரிவிக்கையில், தமிழ் செல்வன் செய்த கொடுமைகள் பற்றி லா கெனுவா நகரின் மேயர் மற்றும் மாநாகர சபை அங்கத்தவர்களுக்கு எமது தூதுவர் விளக்கிக் கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சுடன் வெளிநாட்டு அமைச்சு விரிவாக கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
லாகெனுவா நகரில் வாழும் தமிழர்கள் தமிழ் செல்வனின் சிலையை இவ்வருடம் நவரம்பர் 01ஆம் திகதி நிறுவியமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’